Tuesday, October 26, 2010

உண்டு! இல்லை! இல்லவே இல்லை!

உண்டு!
இல்லை! இல்லவே இல்லை!
உண்டு
இல்லை
உண்டு
இல்லை,இல்லவே இல்லை

என்ன சொல்கிறாய்?இல்லை என்பதை இல்லை என்றால் உண்டுதானே?


உண்டென்றால் அது உண்டு! இல்லை என்றால் அது இல்லை!

அர்த்ததமுள்ள இந்து மதம் எழுதிய கவிஞருக்கு இது அழகல்ல!ஒன்று உண்டு என்று சொல்லும்.அல்லது இல்லை என்று சொல்லும்.

கண்ணனுக்கு தாசனை ஏன் மிரட்டுகிறீர்? பாரதிக்கு தாசனான நான் சொல்கிறேன்:
 பார்ப்பான்  கவிதை எழுதினால் இப்படித்தான்.என் கவிதைகளை படித்துப்பாரும்
பகுத்தறிவுக்  கொள்கைப்பற்றி புரியும்.


கவிஞரும் கண்ணனை பற்றி எழுதியுள்ளார். நானும் கண்ணன் மற்றும் பராசக்தி பற்றி எழுதியுள்ளேன்.உண்டு என்றுதான் நாங்கள் எழுதியுள்ளோம்,

 கவிஞரை ஏன் உன்பக்கம் சேர்த்துக்கொள்கிறீர்? உண்டென்பவன் முட்டாள். 


அப்படிஎன்றால் இல்லை என்பவன் அறிவாளியா? 


அறிவு ஜீவி என்று நான் என்னை சொல்லிகொள்ளவில்லை."இல்லை" என்று  நான் சொல்லவில்லை, "இருந்தால்" நன்றாயிருக்குமே என்றுதான் சொல்லியிருக்கிறேன். (இடையில் யார் இந்த முந்திரிக்கொட்டை?)

அது தசாவதாரத்தில் "அசினுக்கு" சொன்ன வார்த்தை.  உமது கொள்கை என்ன?என் இனிய தமிழ்மக்களுக்கு தாங்கள்  கூறும் அறிவுரை என்ன? இதிலாவது குழப்பாமல் சொல்லும்.

என்னை வைத்து பதினறுவயதினிலே படத்தை  இயக்கிவருக்கு வணக்கம்:.

அன்பே சிவம் என்கிறேன்! . 
சிவம் இருப்பதை நம்புகிறாயா?
நான் அன்பை சிவம் என்கிறேன்? 

அப்படிஎன்றால் சிவம் உள்ளது என்றாகிறது.Bharathi:
நிலம்
உள்ளது
நீர்
உள்ளது
நெருப்பு
உள்ளது
ஆகாயம்
உள்ளது
காற்று
உணர்கிறேன்
தெரிகிறதா
தெரியவில்லை.ஆனால் உணரமுடிகிறது
bharathi:தெரியாததால் நான் காற்றை இல்லை என்று சொன்னால் ஒப்புக்கொள்வாயா?மாட்டேன். உணரமுடிவதால்  உண்டு என்கிறேன்
bharathi;இப்போது இல்லை என்பதை உண்டு என்கிறாய்
இல்லை என்பதை உன்னால் உணரமுடியுமாதலால் உண்டு  என்றாகிறது.
ஆகவே  இல்லை என்று ஒன்று இல்லை.
"இல்லை" என்று சொன்னவர் வழி வந்த மூத்த அண்ணன் " ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று இயம்பவில்லையா?

5 comments:

  1. who are the charactors other than Bharathi?

    ReplyDelete
  2. I wonder whether the visitor from orlando, Florida understands the satire in this entry.

    ReplyDelete
  3. A visitor from New Delhi viewed today.
    Another visitor from Westfied, Indiana viewed yesterday

    ReplyDelete
  4. i am gratified to see that 9 viewers from US have visited this entry so sar.
    I am thinking of adding some entries soon.

    ReplyDelete
  5. A visitor from Meerut viewed this today

    ReplyDelete